பெரம்பலூர்: குரும்பலூரில் உள்ள ஆப்பூர் நல்லேந்திரர் சுவாமி ஸ்ரீநல்லத்தங்காள், மெய்யசுவாமி, கருப்பண்ணசுவாமி, பெரியசாமி மற்றும் பரிவார தேவதைகள் அமைந்துள்ள ஆப்பூர் நல்லேந்திரர் கோயில் மாசிமக தேர்த்திருவிழா கடந்த 22ம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கி நடந்து வருகிறது. முதல்நாள் சூரியவாகனம், சிம்மவாகனத்தில் சுவாமி புறப்பாடு நடந்தது. நேற்று இரவு ரிஷப வாகனத்தில் மேளதாளத்துடன் சுவாமி புறப்பாடும், இன்று பொங்கல் வழிபாடு, மாவிளக்கு, முத்துப்பள்ளக்கு, குதிரை வாகனத்தில் சுவாமி புறப்பாடு, வாணவேடிக்கை, கரகாட்டம் ஆகிய நிகழ்ச்சிகளும் நடக்கிறது. நாளை 7ம் தேதி காலை 9 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. 8ம் தேதி மஞ்சள் நீராட்டுவிழாவுடன் மாசிமக திருவிழா நிறைவு அடைகிறது. ஏற்பாடுகளை கோவில் பூசாரிகள் மற்றும் கிராமமக்கள் செய்து வருகின்றனர்.