பதிவு செய்த நாள்
19
ஏப்
2019
03:04
வீரபாண்டி: வரதராஜ பெருமாள் கோவிலில், சித்திரை பிரம்மோற்சவ விழா கொடியேற்றத் துடன் தொடங்கியது. சேலம், பட்டைக்கோவில், வரதராஜ பெருமாள் கோவிலில், சித்திரை
பிரம்மோற்சவ விழா, கடந்த, 16ல், செல்வர் உற்சவம், அங்குரார்ப்பணத்துடன் தொடங்கியது. நேற்று (ஏப்., 18ல்) காலை, 10:00 மணிக்கு, பிரம்மோற்சவ விழா கருட கொடிக்கு, பூஜை செய்து, கொடிமரத்தில் பட்டாச்சாரியார்கள் ஏற்றினர். இதையொட்டி, ஸ்ரீதேவி, பூதேவியுடன், சர்வ அலங்காரத்தில் வரதராஜர் அருள்பாலித்தார்.
இரவு, சிம்ம வாகனத்தில் சுவாமி திருவீதி உலா வந்தார். இன்று (ஏப்., 19ல்) சூரியபிரபையில் திருவீதி உலா வருகிறார். நாளை (ஏப்., 20ல்) காலை, தங்க கருட வாகனத்தில் பெருமாள் உலா வருகிறார். மாலை, 4:00 மணிக்கு லட்சுமி நரசிம்மரை, ஊஞ்சலில் எழுந்தருளச்செய்வர். 22ல் மோகினி அலங்காரம், 23 மாலை, திருக்கல்யாண உற்சவம், 24ல் திருத்தேர், 25ல் வெண்ணெய்தாழி சேவை, 26ல் தீர்த்தவாரி, 27ல் வெட்டிவேர் சப்பரத்தில் சுவாமி திருவீதி உலா நடக்கிறது. மே, 4 இரவு, சப்தாவரணத்துடன் பிரம்மோற்சவ விழா நிறைவடையும்.
கரபுரநாதர் கோவிலில் இன்று (ஏப்., 19ல்) தேரோட்டம்: சேலம், உத்தமசோழபுரம், கரபுரநாதர் கோவிலில், சித்திரை திருவிழா, நேற்று முன்தினம் (ஏப்., 16ல்) கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தொடர்ந்து, தேரில் கொடி ஏற்றி கலசம் வைக்கப்பட்டது. சாரங்கள் கட்டப்பட்ட தேரில், வண்ண துணிகள் போர்த்தி, வாழை மரங்கள் கட்டி அலங்கரிக்கப்பட்டு, தேரோட்டத்துக்கு
தயாராக, கோவில் ராஜகோபுரம் முன் நிறுத்தப்பட்டுள்ளது. நேற்று (ஏப்., 18ல்) காலை, விநாயகர், பெரியநாயகி கரபுரநாதர், வள்ளி, தெய்வானை சமேத சண்முகர், உற்சவர்களுக்கு சிறப்பு அபி ?ஷகம் செய்து, பூஜை நடந்தது. கரபுரநாதர், பிச்சாண்டார் கோலத்தில் காட்சியளித்தார். மாலை, பெரியநாயகிக்கும் கரபுரநாதருக்கும் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
திருத்தேரோட்டம் இன்று நடக்கவுள்ளது. நாளை (ஏப்., 20ல்), சிறப்பு தரிசனத்தில் நடராஜர் காட்சியளிப்பார். 21 இரவு சப்தாவரணம், 22ல் மஞ்சள் நீராட்டு வைபவத்துடன் சித்திரை திருவிழா நிறைவடையும்.