பதிவு செய்த நாள்
20
ஏப்
2019
01:04
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில், சித்திரை உத்திர பெருவிழாவின் ஏழாம் நாளான நேற்று தேரோட்டம் விமரிசையாக நடந்தது.காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் சித்திரை உத்திரப் பெருவிழா, 15 நாட்கள் நடைபெறும். அதன்படி இந்தாண்டு விழா, 13ல் கொடியேற்றத்துடன் துவங்கியது.ஏழாம் நாள் உற்சவமான, நேற்று மாலை, தேரோட்டம் விமரிசையாக நடந்தது. இதில், அலங்கரிக்கப்பட்ட தேரில், சுந்தராம்பிகை அம்பிகையுடன் கச்சபேஸ்வரர் எழுந்தருளினார். பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க, மாலை, 5:25 மணிக்கு, தேர் அசைந்து ஆடியபடி புறப்பட்டது.நான்கு ராஜ வீதிகள் வழியாக சென்ற தேர், மீண்டும் நிலையை அடைந்தது. வழிநெடுகிலும் பக்தர்கள் கற்பூர தீபாராதனை செய்து, பக்தி பரவசத்துடன் சுவாமியை வழிபட்டனர்.