பதிவு செய்த நாள்
22
ஏப்
2019
03:04
ஈரோடு: கோவை ஆனைகட்டி திருமுறை சேவை மையம், சேலம் திருமுறை திருக்காவணம் சிவனடியார் திருக்கூட்டம் சார்பில், பன்னிரு திருமுறை முற்றோதுதல், ஈரோடு ஆயிர
நகர வைசியர் திருமண மண்டபத்தில், நேற்று (ஏப்., 21ல்) நடந்தது.
திருவாடுதுறை ஆதீனத்தின் வழிப்படி வந்த, அரிகர தேசிகர், தேவாரம், திருவாசகம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளை பாடி, இசைத்து விளக்கம் அளித்தார். நேற்றைய (ஏப்., 21ல்) முற்றோதுதல் விழாவில் அவர் பேசியதாவது: தான் கற்றதை, கேட்டதை, பாடியதை, படித்ததை இன்றைய இளையோருக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும். குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், திருமுறைகளை கற்று கைதேர்ந்தவர்கள், தன்னோடு வைத்துக் கொள்ளாமல் எல்லோருக்கும் கற்பிக்க வேண்டும். ஒரு செயலை ஒரே மனதுடன், ஒரே சிந்தனையுடன் சேர்ந்து செய்யும் போது, அவன் அருள் தானாகவந்து சேர்ந்து விடும்.
இவ்வாறு அவர் பேசினார். பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான சிவனடியார்கள், ஓதுவார்கள், பெண்கள் கலந்து கொண்டனர்.