விழுப்புரம் மாவட்டம், பெரும்பாக்கத்தில் வீற்றிருக்கிறார் வேங்கட வரதராஜப் பெருமாள், திருப்பதி ஏழுமலையானைப் போல் கடிக ஹஸ்தம் என்னும் வளைந்த இடது கரமும், காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாளைப் போல் அபயமளிக்கும் வலக்கரமும் கொண்டு பெருமாள் காட்சி தருவதால் திருப்பதி, காஞ்சிபுரம் ஆகிய இரு தல பெருமாள்களையும் ஒருசேர தரிசித்த புண்ணியம் இவரை தரிசிப்பதால் உண்டாகும். அதோடு அகோபிலம் நரசிம்மரை நினைவூட்டும் விதமாக பெருமாளின் திருமார்பில் சிம்ம பதக்கம் உள்ளது. இத்தலத்துக்கு தட்சிண அகோபிலம் என்றும் பெயருண்டு.