பதிவு செய்த நாள்
27
ஏப்
2019
02:04
பெ.நா.பாளையம்: கூத்தாண்டவர் கோவிலில், தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. சித்திரை தேர் திருவிழாவையொட்டி, பெத்தநாயக்கன் பாளையம் அருகே, பனமடலில், கூத்தாண்டவர்
கோவிலில், கண் திறப்பு நிகழ்ச்சி, நேற்று (ஏப்., 26ல்) காலை, 4:30 மணிக்கு நடந்தது. 9:00 மணிக்கு, தேர் வடம்பிடித்தல் நிகழ்ச்சி தொடங்கியது.
சற்று தூரம் இழுத்து சென்ற பின், தேர் நிறுத்தப்பட்டது. இதையொட்டி, கோவில் வளாகம் முன், பெண்கள் பொங்கல் வைத்து, ஆடு, கோழிகளை பலியிட்டு, நேர்த்திக்கடன் செலுத்தினர். உற்சவமூர்த்திகளான கூத்தாண்டவர், சின்னம்மாள், பெரியம்மாள், சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தனர். இரண்டாம் நாளான இன்று (ஏப்., 27ல்), பாலக்காடு, செண்டை மேளத்துடன், தேர் உற்சவம் நடக்கும். அத்துடன், மஞ்சள் நீராடுதல், படுகளம் நிகழ்ச்சி நடக்கும்.