பதிவு செய்த நாள்
30
ஏப்
2019
11:04
புதுச்சேரி: முதலியார்பேட்டை வன்னியபெருமாள் கோவிலில், ஸ்ரீநிவாச பெருமாள் - அலர்மேல் மங்கை தயார் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
முதலியார்பேட்டை வன்னிய பெருமாள் கோவிலில், பிரம்மோற்சவ விழா கடந்த 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, தினமும், அலர்மேல் மங்கை சமேத ஸ்ரீநிவாச பெருமாளுக்கு, சிறப்பு திருமஞ்சனமும் மற்றும் ஹோமங்களும் நடந்து வருகிறது. பிரம்மோற்சவ விழாவின் ஏழாம் நாளான நேற்று திருக்கல்யாண உற்சவம் நடந்தது.இதனையொட்டி, காலை 10.00 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம் ஹோமும் நடந்தது. மாலை 6.00 மணிக்கு பெருமாள் புறப்பாடு, மாப்பிள்ளை அழைப்பு, சீர்வரிசை எடுத்து வருதல், இரவு 7.00 மணிக்கு மாலை மாற்றுதல், 7.30 மணிக்கு ஊஞ்சல் நலங்கு, இரவு 8.30 மணிக்கு ஸ்ரீநிவாச பெருமாள் - அலர்மேல் மங்கை தாயார் திருக்கல்யாணம் நடந்தது. 9.00 மணிக்கு தீபாரதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.திருக்கல்யாணத்தை திரளான பக்தர்கள் கண்டு களித்தனர்.