சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே கட்டுக்குடிபட்டி மகா மாரியம்மன் கோயிலில் சித்திரைத்திருவிழா நடந்தது. இதையொட்டி ஏப். 28 ம் தேதி காலை 9:00 மணிக்கு செல்வ விநாயகர், மகா மாரியம்மன் மற்றும் பரிவார தேவதைகளுக்கு காப்பு கட்டப்பட்டது. மாலை 6:00 மணிக்கு 1008 திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் வழிபாடு செய்தனர். இரவு 7:00 மணிக்கு பெண்கள் கும்மி அடித்து வழிபாடு செய்தனர். இரவு ஆரத்தி ஊர்வலம் நடந்தது. ஏராளமான பெண்கள் ஊர் மந்தையில் இருந்து கோயில் வரை ஆரத்தி எடுத்து வந்து அம்மனை வழிபட்டனர். நள்ளிரவில் பால்குட ஊர்வலம், பூத்தட்டு நடந்தது. ஏப் 29 ம் தேதி காலை 6:00 மணிக்கு பாலாபிஷேகம் நடந்தது. மாலை 6:00 மணிக்கு பாரம்பரிய முறைப்படி பேத்தப்பன் திருவிழா நடந்தது.