பதிவு செய்த நாள்
30
ஏப்
2019
12:04
சேலம்: சேலம் கோட்டை மாரியம்மன் கோவில், கர்ப்பகிரகத்தில் கற்கள் பதிக்கும் பணி, நேற்று (ஏப்., 29ல்) சிறப்பு பூஜையுடன் துவங்கியது. சேலம், கோட்டை மாரியம்மன் கோவிலில் திருப்பணி மேற்கொள்ள கடந்த, 2015ல் முடிவு செய்யப்பட்டு பணிகளை, 2017 ஜூலை ஆடி பண்டிகைக்குள் முடித்து, கும்பாபிஷேகம் நடத்த கோவில் நிர்வாகம் திட்டமிட்டிருந்தது.
கோவில் பரம்பரை பூசாரிகள், பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால், கட்டுமான பணிகள் மூன்று ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டன. மக்கள் கோரிக்கையை ஏற்று, கற்களால் கோவிலை வடிவமைக்க நிர்வாகம் முடிவு செய்து, அதற்கான பணி தற்போது நடந்து வருகிறது. அம்மன் மூலவர் இருப்பிடமான கர்ப்பகிரகத்தில், கற்கள் பதிக்கும் பணிக்கான பூஜை நேற்று (ஏப்., 29ல்) காலை, நிர்வாக அலுவலர் ராஜாராம் தலைமை யில் துவங்கியது. பணிகளை ஓராண்டுக்குள் முடித்து, 2020 ஏப்ரலில் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.