கர்நாடக மாநிலம் ஹம்பி விருபாட்சர் கோயிலில் தங்கியிருந்தார் காஞ்சிப்பெரியவர். குகை பற்றி விபரங்களை என்னிடம் கேட்டறிந்தார். பின்னர் எனது குறிப்புகள், புத்தகங்களை பெற்றுக் கொண்டு, ”எல்லாம் சரி தான்! நீ சொல்வதும் உண்மையான குகை இல்லை என்றால் என்ன செய்வதாக உத்தேசம்?” என்றார்.
என் முயற்சி வீணாகி விட்டதே என்று என் மனம் குழப்பத்தில் ஆழ்ந்தது. நாக்கு குழறியது. ”சுவாமி! இந்த குகையும் இல்லாவிட்டால் நர்மதை நதிக்கரையில் ஆதிசங்கரர் தீட்சை பெற்றார் என 2500 ஆண்டுகளாக நாம் சொல்லும் விஷயம் பொய்யாகி விடும். குருவைத் தேடி ஆதிசங்கரர் நர்மதைக்கு வந்திருக்கவே மாட்டார்.” என்றேன்.
”சரி! நீ சொல்லும் குகை தான் குருநாதரை சங்கரர் சந்தித்தது என்பதற்கு பிரமாணம் இருக்கிறதா?” எனக் கேட்டார். இதற்கு பின் நர்மதை மலைப்பகுதியை விட்டு சமவெளியில் பாய்கிறது. அங்கு குகைகளே இல்லை. தாங்கள் தெரிவித்தபடி நதிநீர் வர சுரங்கமும் இங்கிருக்கிறது.” என்றேன்.
”சரி. இப்போதே தீர்மானம் செய்திடலாம்” என்று தியானத்தில் ஆழ்ந்தார்.
பொறுமை இழந்து நா குழறியபடி பேசியதை எண்ணி மனம் வருந்தியது.
அரை மணி நேரத்திற்குப் பின், கண் திறந்த காஞ்சிப்பெரியவர் என் முடிவை ஏற்கும்விதமாக வாய் விட்டு சிரித்தார். ஏழு ஆண்டுகள் பட்டபாடு வீண் போகவில்லை என கண்ணீருடன் பெரியவரை வணங்கினேன்.
இதன் பின், காஞ்சி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமி, ஓம்காரேஷ்வர் வந்தார். குகையை செப்பனிட்டு புதுப்பிக்க போபாலில் ’காஞ்சி காமகோடி சேவா டிரஸ்ட்’ நிறுவி திருப்பணிகள் செய்தார். 1987 ஏப்.21 சங்கர ஜெயந்தியன்று ’குகை மந்திர்’ என்னும் பெயரில் இக்கோயில் திறக்கப்பட்டது மத்தியபிரதேச முன்னாள் முதல்வர் அர்ஜுன்சிங் வருகை புரிந்தார். முன்னாள் ஜனாதிபதி வெங்கட்ராமன் குகையை பார்வையிட்டதோடு, ஜனாதிபதி மாளிகைக்கு அழைத்து என்னை பாராட்டினார்.
* இந்தவுர் (அ) கண்ட்வா ரயில் நிலையத்தில் இருந்து 77 கி.மீ., தூரம். பேருந்துகளிலும் செல்லலாம் * கண்ட்வா – ஆஜ்மீர் ரயிலில் சென்று ’ஓம்காரேஷ்வர் ரோடு’ ரயில் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து 13 கி.மீ.,