பாண்டுரங்கனின் பக்தரான ஏகநாதரிடம், ”அறிந்தோ அறியாமலோ பாவத்தில் என் மனம் ஈடுபடுகிறது. நீங்கள் மட்டும் நல்லவராக வாழ்கிறீர்களே எப்படி?” எனக் கேட்டார் ஒருவர்.
”பயம் தான் காரணம்” என்றார் ஏகநாதர்.
”பாண்டுரங்கனின் அருள் பெற்ற தங்களுக்கும் பயம் உண்டா?” என ஆச்சரியப்பட்டார் அவர்.
”இதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது? அனைவருக்கும் மரணம் வருவது உறுதி. பூமியை விட்டு ஒருநாள் நாம் செல்லப் போகிறோம் என்ற உண்மையை உணர்ந்தால் பாவம் பற்றி யோசிக்க நேரம் ஏது? கிடைக்கும் காலத்தை பாண்டுரங்கனின் சேவையில் கழிக்கிறேன். மரண பயமே மனிதனை நல்லவனாக வாழச் செய்யும்” என்றார்.