குடந்தை ராமசாமி கோயிலில் கொடிமரம் அருகில் ஒரு தூணில் ஆஞ்சநேயர் அருள்கிறார். அடுத்துள்ள மண்டப விட்டத்தில் ராகு பகவான் ஆறடி நீளத்தில் ஒரு சர்ப்ப ரூபத்தில், பெருமானை வழிபடுவது போல ஓர் உருவம் அமைந்துள்ளது. அதன் கீழ் நின்று ‘ஓம் ஸ்ரீராகவே நம:’ என்று 108 தடவையும், ஸ்ரீராகு காயத்ரியை 16 தடவையும் சொல்லிப் பிரார்த்தித்தால், ராகு தோஷங்கள் அனைத்தும் நீங்கி, சகல சவுபாக்கியங்களும் உண்டாகும்.