பதிவு செய்த நாள்
02
மே
2019
03:05
வால்பாறை:அண்ணாநகர் முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவில், பக்தர்கள் நேற்று (மே., 1ல்) தீர்த்த குடம் எடுத்து வழிபட்டனர்.
வால்பாறை அண்ணாநகர் முத்துமாரியம்மன் கோவிலில், 32ம் ஆண்டு திருவிழா கடந்த, 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில், நேற்று (மே., 1ல்) காலை, 10:00 மணிக்கு பல்வேறு கோவில்களில் இருந்து கொண்டுவரப்பட்ட தீர்த்தம் மற்றும் பால்குடங்களை பக்தர்கள் கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்து சென்றனர்.
அதன் பின், அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜை நடந்தது. விழாவில், இன்று, 2ம் தேதி காலை, 11.00 மணிக்கு அம்மனுக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. மதியம், 12:00 மணிக்கு
பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. விழாவில், நாளை (3ம் தேதி) இரவு, 7:00 மணிக்கு பூக்குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடக்கிறது.