அன்னூர் மாகாளியம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02மே 2019 03:05
அன்னூர்:பூரண்டாம்பாளையம் மாகாளியம்மன் கோவில் திருக்கல்யாண உற்சவத்தில் திரளானோர் பங்கேற்றனர்.
பச்சாபாளையம் ஊராட்சி, பூரண்டாம்பாளையத்தில், மதுரை வீரன், மாகாளியம் மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், திருக்கல்யாண உற்சவ திருவிழா கடந்த 15 ம் தேதி துவங்கியது.முனி பூஜை, 28 ம் தேதி நள்ளிரவில் நடந்தது. 29 ம் தேதி அம்மனுக்கு நகை எடுத்து வருதல், மதுரை வீரன், மாகாளியம்மன் உலா முக்கிய வீதிகள் வழியாக வான வேடிக்கையுடன் நடந்தது. 30 ம் தேதி காலையில் அம்மனுக்கு சக்தி கரகம் எடுத்தல், அம்மன் அழைத்தல், பொங்கல் வைத்தல், மாவிளக்கு எடுத்தல் நடந்தது. மாலையில் கிளிவேட்டை நடந்தது. இரவு நடன நிகழ்ச்சி நடந்தது. நேற்று மஞ்சள் நீராட்டு விழா நடந்தது.