பதிவு செய்த நாள்
02
மே
2019
03:05
பொங்கலூர்: பொங்கலூர் தங்காய்புதூர் மாகாளியம்மன் கோவிலில், பொங்கல் பூச்சாட்டு விழா நடந்தது.
இக்கோவிலில் சித்திரை திருவிழா கடந்த, 23ல் துவங்கியது. தொடர்ந்து கணபதி ஹோமம், பொரிசாட்டுதல் நிகழ்ச்சி, சக்தி அழைத்தல், வாண வேடிக்கை, கலை நிகழ்ச்சி, கங்கையில் தீர்த்தம் எடுத்தல் உள்ளிட்டவை நடந்தன.நேற்று முன்தினம் (ஏப்., 30ல்) பொட்டு அம்மனு க்கும், நேற்று (மே., 1ல்) மாகாளியம்மனுக்கும் பொங்கல் வைத்து வழிபாடு செய்யப்பட்டது.
பெண்கள் மாவிளக்கு எடுத்து வந்து, அம்மனை வழிபட்டனர். பின், தீர்த்தாபிஷேகம், பாலாபிஷேகம், கும்பம் கங்கையில் விடுதல் உள்ளிட்டவை நடந்தன.
இன்று (மே., 2ல்), மஞ்சள் நீராடல் நடக்கிறது.சிறப்பு அலங்காரத்தில், ஸ்ரீ மாகாளியம்மன், பொட்டு அம்மன், விநாயகப்பெருமான், முனியப்ப சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.