பதிவு செய்த நாள்
02
மே
2019
04:05
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், பிரம்ம தீர்த்த குளம், சிவகங்கை தீர்த்த குளம் உள்ளது. கடந்த, 23 மாலை மழை பெய்தது. கோவில் வளாகத்தில் இருந்த மழைநீர், குளத்துக்கு வந்தது. நீரின் தட்பவெப்ப மாற்றத்தால், இரண்டு குளங்களிலும் மீன்கள் செத்து மிதந்தன. கோவில் நிர்வாகத்தினர். உடனடியாக மீன்களை அப்புறப்படுத்தி குளத்தை தூய்மைப்படுத்தினர். கடந்த, 25ல், கலெக்டர் கந்தசாமி குளத்தின் தூய்மை குறித்து ஆய்வு செய்தார். நேற்று (மே., 1ல்) , மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவி பொறியாளர் அக்பர், சுகாசினி, ஓய்வு பெற்ற சுற்றுச்சூழல் பொறியாளர் ராஜசேகரன் ஆகியோர், நேற்று (மே., 1ல்) குளங்களை ஆய்வு செய்தனர். தண்ணீரை இயற்கை முறையில் சுத்திகரிக்க, ஆலோசனை நடத்தி வருகின்றனர்.