பதிவு செய்த நாள்
03
மே
2019
01:05
ஆனைமலை:ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், மழை வேண்டி சிறப்பு யாக வழிபாடு நடந்தது.தமிழகம் முழுவதும் வறட்சி நீடிப்பதால், பெரும்பாலான கிணறு, ஆழ்குழாய் கிணறு, குட்டை உள்ளிட்ட நீராதாரங்கள் வறண்டு உள்ளன.மழை பெய்வதற்காக வறட்சி காலத்தில், மழை வேண்டி வருண பகவானை வழிபட யாகம் நடத்துவது ஐதீகம். இந்நிலையில், தமிழகம் முழுவதும் முக்கிய கோவில்களில், மழை வேண்டி யாகம் நடத்த வலியுறுத்தி, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் உத்தரவிட்டு உள்ளார்.
ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், நேற்று (மே., 2ல்) காலை, மழை வேண்டி யாகம் நடத்தப்பட்டது. காலை, 5:00 மணிக்கு கணபதி ஹோமம், வர்ண யாகம் நடந்தது. அதன்பின், அம்மனுக்கு பால், தயிர், இளநீர் ஆகியவற்றால், சிறப்பு அபிஷேகம் நடந்தது.தொடர்ந்து சிறப்பு அலங்காரம், தீபாராதனை வழிபாடு நடந்தது. மழை வேண்டி, கோவில் பணியாளர்கள், பக்தர்கள் வருண பகவானை மனமுருகி வழிபட்டனர்.