வால்பாறை முத்துமாரி அம்மனுக்கு திருக்கல்யாணம் வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03மே 2019 01:05
வால்பாறை:அண்ணாநகர் முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவில் அம்மனுக்கு திருக்கல்யாணம் நடந்தது.
வால்பாறை அண்ணாநகர் முத்துமாரியம்மன் கோவில், 32ம் ஆண்டு திருவிழா கடந்த, 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று முன் தினம் (மே., 1ல்) இரவு நடுமலை ஆற்றிலிருந்து பக்தர்கள் சக்தி அழைத்து, அதிகாலை, 4:00 மணிக்கு கோவிலுக்கு வந்தனர்.நேற்று (மே., 2ல்) காலை, 11:00 மணிக்கு முத்துமாரியம்மனுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சுப்ரமணிய சுவாமி கோவில் முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் வள்ளிக்கண்ணு, முன்னாள் நகராட்சி தலைவர் கணேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.மதியம், 12:00 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில், இன்று (3ம் தேதி) இரவு, 7:00 மணிக்கு பூக்குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடக்கிறது.