பதிவு செய்த நாள்
03
மே
2019
01:05
திருப்பூர்:திருப்பூர்ஸ் ரீவிஸ்வேஸ்வர சுவாமி, ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோவில் தேரோட்டம், வரும், 18 மற்றும், 19ம் தேதிகளில் நடைபெற உள்ளது.
நகரின் காவல் தெய்வமாக உள்ள, செல்லாண்டியம்மன் கோவிலில், 11ம் தேதி மாலை கிராமசாந்தி பூஜை நடக்கும். ரத வீதிகளில் உலா வந்து, விழாவை துவக்குவர். வரும், 12ம் தேதி மாலை, 6:30 மணிக்கு, கொடியேற்றம் மற்றும் கற்பக விருட்ஷ வாகன காட்சி நடைபெறும்.தினமும், காலை, மாலை இருவேளையும் அபிஷேகமும், வாகன காட்சிகளும் நடக்கும்.
13ம் தேதி பூத வாகனம் மற்றும் அன்ன வாகனம்; 14ல் சேஷ வாகனம், கயிலாக வாகனம், காமதேனு வாகன காட்சிகள்; 15ல், கற்ப விருட்ஷ வாகனம், அதிகார நந்தி வாகனம், யாழிவாகன காட்சிகள் நடக்கும்.
ஐந்தாம் நாளான, 16ம் தேதி மாலை, பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நிகழ்ச்சி விமரிசையாக நடக்கும்.பெருமாள், கருடசேவை புறப்பாடாகி அருள்பாலிப்பார். 17ம் தேதி, விசாலாட்சியம் மன் உடனமர் விஸ்வேஸ்வர சுவாமி, கனகவல்லி தாயார், பூமிதேவி தாயாருடன் வீரராகவப்பெருமாள் திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது.
திருக்கல்யாண உற்சவத்தை தொடர்ந்து, வெள்ளை யானை வாகனம், அம்மன் பல்லக்கு சேவை, அனுமன் வாகன காட்சிகள் நடக்கும். தேர்த்திருவிழா நடக்கும், 18 ம் தேதி காலை, சோமாஸ்கந்தர், ஸ்ரீதேவி பூதேவி சமேத வீரராகவப்பெருமாள் அதிகாலை, 5:00 மணிக்கு திருத்தேரில் எழுந்தருளி அருள்பாலிக்கின்றனர்.
அன்று மாலை,3:00 மணிக்கு, விஸ்வேஸ்வர சுவாமி தேரோட்டம் நடைபெறும். 19ம் தேதி மாலை, வீரராகவப் பெருமாள் கோவில் தேரோட்டம் நடைபெறுகிறது. பக்தர்கள் வடம் பிடித்து, தேர் இழுக்க உள்ளனர்.தேரோட்டத்துக்கு மறுநாள், 19ம் தேதி மாலை பரிவேட்டை, குதிரை வாகன காட்சிகள், கருவம்பாளையம் மாகாளியம்மன் கோவிலில் இருந்து நடக்கும். 21ம் தேதி வீரராகவப்பெருமாள் கோவிலில் தெப்பத்திருவிழாவும், 22ம் தேதி மகாதரிசன காட்சியும் நடக்கிறது. விழா நிறைவாக, 23ல் மஞ்சள் நீர் விழாவும், 24ல் விடையாற்றி உற்சவ நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.இதுவரை இல்லாத வகையில், தேரோட்ட விழா நடக்கும், 18 மற்றும் 19ம் தேதிகளில், ருத்ரசிவன், அனுமந்தராயர் ஊர்வலமும் நடைபெற உள்ளது.
விழாவுக்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகமும், விழாக்குழுவினரும் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.