செஞ்சி:மேல்சித்தாமூர் ஜின கஞ்சி மடத்தில் உண்ணா நோன்பு இருந்து வந்த ஜெயின் மத பெண் துறவி நேற்று (மே., 3ல்) இரவு முக்தியடைந்தார்.விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த மேல் சித்தாமூரில் பழமையான ஜெயின் மடம் உள்ளது. இங்கு யாத்திரை வந்திருந்த கர்நாடகாவை சேர்ந்த பெண் துறவி சுப்ரமத் பிரபாவதி,65; சமாதி நிலையை அடைய கடந்த ஒன்னரை மாதம் முன் உண்ணா நோன்பை துவங்கினார்.
கடந்த 27ம் தேதிக்கு முன்பு வரை தண்ணீர் மட்டும் அருந்தி வந்தவர் 27ம் தேதியில் இருந்து தண்ணீர் அருந்துவதையும் நிறுத்திவிட்டார்.இவர் முக்தியடைய 24 மணி நேரமும் பிரார்த்தனை நடந்து வந்தது. நேற்று (மே., 3ல்) இரவு 8.45 மணிக்கு நாடி துடிப்பு அடங்கி முக்தியடைந்தார். இதை டாக்டர் ஒருவரும் உறுதி செய்தார்.இறந்த துறவியின் உடல் இன்று (மே., 4ல்)காலை 5:00 மணி முதல் 7:00 மணிக்குள் கொப்பரை தேங்காயில் நெய் ஊற்றி தீயிலிட உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை மடாதிபதிகள் செய்து வருகின்றனர்.