மயிலம்:மயிலம் பகுதி கோவில்களில் நேற்று பிரதோஷ வழிபாடு நடந்தது.மயிலம் அடுத்த கொல்லியங்குணம் சிவன் கோவிலில் நேற்றுமுன்தினம் (மே., 2ல்)பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
கோவில் வளாகத்தில் உள்ள நந்திக்கு நடந்த மகா தீபாராதனை வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.மயிலம் சுந்தர விநாயகர் கோவில்,பெரும்பாக்கம், நெடி பாதிராப்புலியூர், தென்பசியார், செண்டூர், ஆலகிராமம் ஆகிய ஊர்களில் உள்ள சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது.