* எதிலும் உண்மையாக இருங்கள். ஏனெனில் உண்மையே கடவுளின் கண்ணாடி. * கவலை, பயத்திற்கு இரையாகாதீர். கடவுளை நம்பி உழைப்பில் ஈடுபடுங்கள். * அதிசயத்தை நிகழ்த்தும் சக்தி, பக்திக்கு மட்டுமே உண்டு. தெய்வத்தன்மையை வெளிப்படுத்தும் முயற்சியில், மனிதன் ஈடுபட வேண்டும். * ஒரே உண்மையைத் தான் எல்லா அறிவு நூல்களும், பல பெயர்களில் சொல்கின்றன. * அன்பை விடச் சிறந்தது வேறில்லை. அன்புள்ளம் அனைவரையும் அரவணைக்கும். * உள்ளத்தில் அன்பு இல்லாமல் இன்பம் உண்டாகாது. அன்பே வாழ்வின் ஆதாரசக்தி. * நற்பண்புகளை அறிந்த பிறகும் கூட, மனிதனுக்கு தீய பண்புகளை விட மனமில்லை. * உங்களை நீங்களே திருத்திக் கொள்வதில், தயக்கம் கொள்ளக் கூடாது. * வெற்றியிலும், தோல்வியிலும் சமநிலை இழக்காமல் உறுதியுடன் வாழுங்கள். * நேர்மை, துணிச்சல் இருந்தால் செல்லும் பாதை நேரானதாகவே இருக்கும். * தனக்கும், பிறருக்கும் துன்பம் தருவது பாவம், இன்பம் தருவது புண்ணியம். * மனதால் பிறருக்கு தீங்கு நினைக்காதீர். அதற்குரிய தண்டனையை அனுபவிக்க நேரிடும். * உழைக்கும் இடத்தில் வறுமைக்கு இடமிருக்காது. - பளிச்சென சொல்கிறார் பாரதியார்