பதிவு செய்த நாள்
08
மே
2019
03:05
மகுடஞ்சாவடி: இளம்பிள்ளை அருகே, கஞ்சமலை காலாங்கி சித்தர் கோவிலில், சித்திரை திருவிழா, கடந்த, 5ல், விநாயகர் திருவீதி உலாவுடன் தொடங்கியது. நேற்று முன்தினம்
(மே., 6ல்)நள்ளிரவு, 12:00 மணிக்கு, சித்தருக்கு சந்தனகாப்பு அபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து, சந்தனத்தால் மூலவர் சித்தருக்கு அலங்காரம் செய்யப்பட்டது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். நேற்று (மே., 7ல்)காலை முதல், மாலை வரை, ஏராளமான பக்தர்கள், ராகி களி தயாரித்தும், பொங்கல் வைத்தும், சித்தருக்கு படையலிட்டு, நேர்த்திக்கடன் செலுத்தினர். இன்று (மே., 8ல்)மதியம், 12:00 மணிக்கு, காளியம்மனுக்கு அபிஷேகம், தீ மிதி விழா நடக்கிறது. நாளை (மே., 9ல்) காலை, காளியம்மனுக்கு பொங்கல் வைத்தல், சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. மே, 10ல், மஞ்சள் நீராட்டத்துடன் விழா நிறைவடையும்.
ரூபாய் நோட்டு...: ஓமலூர், புளியம்பட்டி, பெரிய மாரியம்மன் கோவில், சித்திரை திருவிழா, நேற்று முன்தினம் (மே., 6ல்) தொடங்கியது. நேற்று (மே., 7ல்) காலை, அம்மன், ரூபாய் நோட்டு அலங்காரத்தில் அருள்பாலித்தார். இன்று (மே., 8ல்) காலை, கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்தல், அலகு குத்துதல், கரகம் எடுத்தல், நாளை (மே., 9ல்) வண்டிவேடிக்கை, சத்தாபரணம் நடக்கவுள்ளது.