Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சதுர்த்தி விரதம், வர சதுர்த்தி: ... சஷ்டி விரதம்: முருகனை வழிபட வேண்டும் வரம் கிடைக்கும்! சஷ்டி விரதம்: முருகனை வழிபட வேண்டும் ...
முதல் பக்கம் » துளிகள்
வசந்த பஞ்சமி: சரஸ்வதியை வழிபட மங்களகரமான வாழ்க்கை அமையும்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
வசந்த பஞ்சமி: சரஸ்வதியை வழிபட மங்களகரமான வாழ்க்கை அமையும்!

பதிவு செய்த நாள்

23 ஜன
2026
10:01

ஒருவர் பெற வேண்டிய மிக உயரிய செல்வம் ஞானம். அதை அருளும் சரஸ்வதி தேவி அவதார நாளாக வசந்த பஞ்சமி கொண்டாடப்படுகின்றது. ஆதியில், பிரம்ம தேவர் அனைத்து உலகங்களையும், உயிரினங்களையும் படைத்த பின்னரும், அவருக்கு ஏதோ குறை இருப்பது போலவே தோன்றியது. அனைத்துப் படைப்புகளும் அமைதியாக, மௌனமாக‌ இருந்தன. இது குறித்து சிந்தித்தவாறே பிரம்ம தேவர் தம் கமண்டலத்தை எடுத்தார். அப்போது அதிலிருந்து சில துளிகள் கீழே சிந்தின. அவை ஒருங்கிணைந்து, ஒரு பெரும் சக்தியாக, மிகுந்த பிரகாசத்துடன் உருவெடுத்தன. ஒரு அழகிய பெண், நான்கு திருக்கரங்களுடன் கூடிய உருவில் பிரம்ம தேவர் முன் தோன்றினாள்.. சுவடிகள், ஸ்படிக மாலை, வீணை முதலியவற்றைத் தாங்கியவளாகத் தோன்றிய அந்த மஹாசக்தி, தன் வீணையை மீட்டி, தேவகானம் இசைக்கத் தொடங்கினாள். ஞான ஒளிப் பிழம்பான அம்பிகை, கானம் இசைக்கத் தொடங்கியவுடன், பிரம்ம தேவரின் படைப்புகள், ஒசை  நயம் பெற்றன.. ஆறுகள் சலசலக்கும் ஒலியுடன் ஓடத் துவங்கின. கடல் பெருமுழக்கத்தோடு அலைகளைப் பிரசவித்தது.. காற்று பெருத்த  ஓசையுடனும்,  முணுமுணுக்கும் ஒலியுடனும் வீசியது. 


மனிதர்கள் மொழியறிவு பெற்றனர். பிரம்மதேவர் மகிழ்ந்தார்.வாக்வாதினி, வாகீசுவரி, பகவதி  என்றெல்லாம் அம்பிகையைப் போற்றித் துதித்தார். இவ்வாறு சரஸ்வதி அவதரித்த தினமே வசந்த பஞ்சமி நாள் என கொண்டாடப்படுகிறது.  சரஸ்வதி தேவிக்கு வசந்த பஞ்சமி தினத்தில் பூஜைகள் செய்து வழிபாடு செய்வதால், ஞானம் மற்றும் அறிவு சார்  கலைகளில் முன்னேற்றம் கிடைப்பதுடன், உயர்நிலைகளை அடைதலும் கிட்டும் என்பது நம்பிக்கை.  வட மாநிலங்களில் குறிப்பாக, மகாராஷ்டிரம், மேற்கு வங்காளம், ஒரிசா, அசாம் போன்ற இடங்களில் வசந்த பஞ்சமி சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. பஞ்சாப், காஷ்மீா், அசாம் மாநிலங்களில் வசந்த பஞ்சமி நாளில் சரஸ்வதி தேவிக்கு மஞ்சள் ஆடை, மஞ்சள் மலா் மாலைகள் அணிவிக்கப்படுகின்றன. மஞ்சள் ஆடை அணிந்துதான் மக்களும் பூஜை செய்கின்றனா். மஞ்சள் பிள்ளையாா் வைத்து வழிபட்டுப் பின்னா் தேவிக்கு மஞ்சள் நிறத்திலேயே இனிப்பு வகைகள் தயாாிக்கப்பட்டு நிவேதனம் செய்யப்படுகின்றன. மஞ்சள் நிற சேலைகள், மஞ்சள் நிற துப்பட்டாக்கள், ஜாிகை மற்றும் கோட்டா அலங்கார ஆடைகளைப் பெண்கள் அணிவாா்கள். எங்கு பாா்த்தாலும் மங்களகரமாக மஞ்சள் வண்ணம் தான் கொலுவீற்றிருக்கும்.


வசந்த பஞ்சமி அன்று மஞ்சள் நிற ஆடை அணிந்து, கேசரி, லட்டு, குங்குமப்பூ சேர்த்த இனிப்புகள் ஆகியவற்றை சரஸ்வதி தேவிக்கு படைத்து வழிபட வேண்டும். ஞானம், செழிப்பு, மங்களகரமான வாழ்க்கையை பெறுவதற்கு வசந்த பஞ்சமி அன்று சரஸ்வதி தேவியை வழிபடவேண்டும். மாணவர்கள் தங்களின் புத்தகங்களையும், கலைஞர்கள் தங்களின் இசைக்கருவிகளையும் சரஸ்வதி தேவியின் முன் வைத்து ஆசி பெறுவார்கள்.

பகிர்க copied
 
மேலும் துளிகள் »
temple news

புகழ் பெற வேண்டுமா செப்டம்பர் 28,2026

நரசிம்மர், கருடன், பெரியாழ்வார் மூவருக்குரிய நட்சத்திரம் சுவாதி. ஸ்ரீவில்லிபுத்துாரிலில் ஆனி மாதம் ... மேலும்
 
temple news
ஓம் அனுமனே போற்றிஓம் அஞ்சனை மைந்தனே போற்றிஓம் அறக்காவலனே போற்றிஓம் அவதார புருஷனே போற்றி ஓம் அறிஞனே ... மேலும்
 
temple news
* நல்லதைச் செய். உனக்கு நல்லதே நடக்கும். * அறிவுக்கு முற்றுப்புள்ளி வைக்காதே. வாழ்நாள் முழுவதும் படி.  * ... மேலும்
 
temple news
* பொறுமையாக இரு. அதை விட உயர்ந்த பண்பு வேறில்லை. * கடவுளின் பெயரைச் சொல். நல்லதே நடக்கும்.  * உலகம் ... மேலும்
 
temple news
ஓம் சந்தோஷி மாதா போற்றிஓம் சகலமும் அருள்வாய் போற்றிஓம் வேதங்கள் துதிப்பாய் போற்றிஓம் வெற்றிகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar