கிருஷ்ணராயபுரம் திருவிழா கம்பத்திற்கு தீர்த்தம் ஊற்றி வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09மே 2019 03:05
கிருஷ்ணராயபுரம்: சிந்தலவாடி மாரியம்மன் கோவில் திருவிழா துவங்கியதை முன்னிட்டு, பக்தர்கள் காவிரி தீர்த்தம் கொண்டு வந்து, கம்பத்தில் ஊற்றி நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர்.
கிருஷ்ணராயபுரம் அடுத்த சிந்தலவாடி மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழா, கடந்த, 5ல், பூச்சொரிதலுடன் துவங்கியது. அதைதொடர்ந்து, கோவிலில் நடப்பட்டுள்ள கம்பத்திற்கு, சிந்தலவாடி, லாலாப்பேட்டை, மகிளிப்பட்டி, நந்தன்கோட்டை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள், காவிரி ஆற்றில் இருந்து தண்ணீர் கொண்டு வந்து ஊற்றி நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர்.