பதிவு செய்த நாள்
10
மே
2019
03:05
நகரி: சித்தூர் மாவட்டம், நகரி டவுனில், புதியதாக வித்திய விநாயகர் கோவில் கட்டப்பட்டது. இக்கோவிலின் மஹா கும்பாபிஷேகம், நேற்று முன்தினம் (மே., 8ல்), கணபதி ஹோமத்துடன் துவங்கியது.
இதற்காக, கோவில் வளாகத்தில் ஒரு யாகசாலை, 64 கலசங்கள் வைத்து, பூஜைகள் நடந்தன.நேற்று (மே., 9ல்) காலை, 9:30 மணிக்கு, கலசங்கள் ஊர்வலமாக புறப்பட்டு, புதியதாக
அமைக்கப்பட்ட கோவில் விமானத்தின் மீது கலச நீர் ஊற்றி, மஹா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அதை தொடர்ந்து, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும்
தீபாராதனை நடந்தது.