வாலாஜாபேட்டை தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் திருமஞ்சன விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10மே 2019 03:05
வாலாஜாபேட்டை: வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில், மழை வேண்டி தொடர் திருமஞ்சன விழா நேற்று (மே., 9ல்) நடந்தது. இதையொட்டி, தன்வந்திரி பெருமாளுக்கு விதவிதமான திரவியங்களில் திருமஞ்சனம் செய்யப்பட்டது. இந்த திருமஞ்சன விழா, வரும் ஜூன், 2 வரை நடக்கிறது. தன்வந்திரி யாகம், புஷ்பாஞ்சலி, லட்சார்ச்சனை ஆகியவை நடந்தன. முரளிதர சுவாமிகள் தலைமையில், ஏராளாமான பக்தர்கள் பங்கேற்றனர்.