பரமக்குடி: பரமக்குடியில் உள்ள சப்த கன்னியர் கோயிலில் ஸ்ரீசொர்ண வராஹி அம்மன் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார். இங்கு பஞ்சமி திதியன்று அம்மனுக்கு முருகன் குருக்கள் தலைமையில் யாகசாலை சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து ஸ்ரீ சொர்ண வராஹி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகி ராஜசேகர் செய்திருந்தார்.