கமுதி :கமுதி அருகே ஸ்ரீபெரியமுத்தம்மன் கோயில் வைகாசி பொங்கல் விழாவை முன்னிட்டு கொடியேற்றம், முகூர்த்தகால் நடும் நிகழ்ச்சி, வலையபூக்குளம் சத்ரிய நாடார் உறவின் முறை தலைவர் கோபால் தலைமையில் நடந்தது.
கமுதி அருகே வலையபூக்குளம் நாடார் உறவின் முறைக்கு பாத்தியபட்ட ஸ்ரீ பெரியமுத்தம்மன், ஸ்ரீ சந்தனமாரியம்மன், ஸ்ரீ பத்திரகாளியம்மன், ஸ்ரீ பெரியாண்டவர் திருக்கோயில் வைகாசி பொங்கல் விழாவை முன்னிட்டு, நேற்று முன்தினம் அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, வாஸ்துசாந்தி, கணபதி ேஹாமம், மிருத்சங்கிரகண பூஜைகள் செய்யபட்டு, நேற்று கொடிமரத்திற்கு அபிஷேகம் செய்யப்பட்டு, கொடியேற்றம், முகூர்த்தகால் நடும் நிகழ்ச்சி நடந்தது.வரும் மே 21ல் நடக்கும் வைகாசி பொங்கல் விழா நிகழ்ச்சிக்காக பக்தர்கள் காப்பு கட்டுலுடன் விழாவை துவங்கியது. நிகழ்ச்சியில் வலையபூக்குளம் சத்ரிய நாடார் உறவின்முறை காரியக்காரர் நாகராஜ், முறைகாரர்கள் சித்திரவேல், வசந்தன், முனியசாமி, சந்தனம் மற்றும் கோயில் நிர்வாகத்தினர் உட்பட பக்தர்கள் பலர் பங்கேற்றனர்.