பட்டாபிஷேக ராமர் கோயில் விழா கொடியேற்றத்துடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11மே 2019 12:05
திருப்புல்லாணி:-திருப்புல்லாணி ஆதிஜெகநாதப்பெருமாள் கோயிலுடன் இணைந்த சன்னதியில் பட்டாபிஷேக ராமர் சமேத சீதா பிராட்டியார், பரதன், சத்துருக்கனன், லட்சுமணர், ஆஞ்சநேயர் உள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் சித்திரைதிருவிழா நடக்கிறது.நேற்று முன்தினம் மாலை 6:30 மணிக்கு மேல் அனுக்ஞையுடன் விழா துவங்கியது.நேற்று காலை 10:30 மணிக்குபட்டாபிஷேக ராமர் சன்னதி முன்புறமுள்ள கொடிமரத்தில் கொடிப்பட்டம் ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. உற்சவ மூர்த்திகளுக்கு விஷேச திருமஞ்சனம், சாற்றுமுறை கோஷ்டிப்பாராயணம் உள்ளிட்டவைகள் நடந்தது. மே 15ல் திருக்கல்யாண உற்ஸவமும், மே 18 சனிக்கிழமை அன்று காலை 9:00முதல் 10:00மணிக்குள் தேரோட்டம் நடைபெறும். மே 19 வரை தொடர்ந்து 10 நாட்களுக்கு விஷேச திருமஞ்சனம், வீதியுலா, தீர்த்தவாரி உற்சவம், மண்டகப்படி பூஜைகள் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தானம், தேவஸ்தான நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.