பதிவு செய்த நாள்
13
மே
2019
02:05
போத்தனூர்: சுந்தராபுரம் அருகே சாரதா மில் லைன் மாரியம்மன் கோவில் விழாவை முன்னிட்டு இன்று (மே.,13ல்), அபிஷேக பூஜை நடக்கிறது.மாரியம்மன் கோவிலின், 71ம் ஆண்டு விழா கடந்த, 7ம் தேதி கணபதி ஹோமத்துடன் துவங்கியது.
தொடர்ந்து முளைப்பாரி இடுதல், பூச்சாட்டுதல், கம்பம் நடுதல், அபிஷேக ஆராதனை உள்ளிட்டவை நடந்தன.இன்று (மே.,13ல்) இரவு அபிஷேக பூஜையும், நாளை மே.,14ல்)இரவு அம்மன் அழைத்தல், திருக்கல்யாண உற்சவம், அன்னதானம் உள்ளிட்டவையும் நடக்கின்றன. 15ம் தேதி காலை பொங்காளியம்மன் கோவிலிலிருந்து, சக்தி கரக ஊர்வலம் துவங்குகிறது. மதியம் கோவிலில் அம்மனுக்கு பால் அபிஷேகம், மாலை மாவிளக்கு வழிபாடு, அன்னதானம், கம்பம் எடுத்தல் உள்ளிட்டவை நடக்கின்றன.16ம் தேதி மாலை, மஞ்சள் நீர் உற்சவம், மகா அபிஷேக பூஜையும், 17ம் தேதி மதியம் மகா அன்னதானம், உச்சி பூஜை உள்ளிட்டவை நடக்கின்றன.