உடுமலை:உடுமலை அருகே பூளவாடியில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவி லில் இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா கடந்த 6ம் தேதி கணபதி ஹோமத்துடன் துவங்கியது. அன்று இரவு திருக்கம்பம் நடப்பட்டது.கடந்த 8ம் தேதி மாவிளக்கு, பூவோடு எடுத்தல், அம்மன் திருக்கோவில்களுக்கு எழுந்தருளல் உட்பட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடர்ந்து அம்மன் திருவீதியுலாவும், மஞ்சள் நீராடுதல், சக்திகும்பம் கங்கையில் விடுதல் நடந்தன.விழாவின் இறுதி நாளில் அம்மனுக்கு மகா அபிஷேகமும், ஆராதனையும் நடந்தது.