திருக்கோவிலுார்: திருக்கோவிலுார், செவலைரோட்டில் உள்ள கங்கையம்மன் கோவிலில் சாகை வார்த்தல் விழா நடந்தது.இதையொட்டி, நேற்று முன்தினம் காலை 10:00 மணிக்கு, தென்பெண்ணை ஆற்றில் இருந்து சக்தி கரகம் அழைத்து வரப்பட்டு, முக்கிய வீதிகள் வழியாக சென்றது.பக்தர்கள் கூழ்குடம் எடுத்து ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். மதியம் 12:30 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை முடிந்து, கூழ் படைக்கப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.இரவு 8:00 மணிக்கு, கும்பம் கொட்டும் வைபவம் நடந்தது. சாதம், காய்கறிகள் படையலிட்டு மகா தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வினியோகிக்கப்பட்டது.