பதிவு செய்த நாள்
13
மே
2019
02:05
திருப்பூர்:திருப்பூர், குமரன்ரோடு, புனித கேத்ரீனாள் ஆலய தேர்த்திருவிழா நேற்று (மே., 12ல்), நடந்தது.முன்னதாக, நவநாள் திருப்பலி சிறப்பு நற்கருணை வழிபாடு தொடர்ந்து, ஒவ்வொரு விழா நாட்களிலும் திருப்பலி நிகழ்ச்சி நடந்தது. பங்கு தந்தைகள் பங்கேற்று திருப்பலி நடத்தினர். இந்நிலையில், நேற்று (மே., 12ல்) நடந்த தேர்த்திருவிழாவையொட்டி, சிறப்பு திருப்பலி, புதுநன்மை, உறுதி பூசுதல் வழங்கும் விழா உள்ளிட்டவை நடந்தது.குமரன்ரோடு, ராயபுரம், நஞ்சப்பா பள்ளி வீதி வழியாக சென்ற தேர், முடிவில் ஆலயத்தை சென்றடைந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.