பதிவு செய்த நாள்
14
மே
2019
03:05
ராமநாதபுரம்:அழகன்குளம் பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் வைகாசி விசாக திருவிழா மே 8ல் கணபதி ஹோமம், அபிஷேகம் அலங்காரத்துடன் துவங்கியது.
மே 9ல் பாலசுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், இரவு 7:00 மணிக்கு காப்பு கட்டும் வைபவமும், திருவிளக்கு பூஜையும் நடந்தது. வைகாசி விசாகப்பெருவிழாவை முன்னிட்டு தினசரி இரவு 7:00 முதல் 8:00 மணி வரை ஆன்மிக சொற்பொழிவு மே 18 வரை நடக்கிறது.
விழாவின் 10 நாட்களும் திருப்புகழ் பாடல்கள், பஜனைகள், ஸ்ரீ அழகிய நாயகி அம்மன் மாதர் சங்கத்தினராலும், அதனை தொடர்ந்து சான்றோர்களின் சமயற்சொற்பொழிவுகளும் நடை பெறுகிறது.மே 18 விசாகத்தன்று சிறப்பு அபிஷேகத்துடன் காலை 8:30 மணிக்கு பால்குடம், காவடி, ரதக்காவடி, பறவைக்காவடி, மயில்காவடியும், பகலில் பக்தர்களுக்கு அன்னதானமும், இரவு 10:45 மணிக்கு பூவிலிறங்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை பாலசுப் பிரமணிய சுவாமி கோயில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.