பதிவு செய்த நாள்
14
மே
2019
03:05
மானாமதுரை:மானாமதுரையில் கர்நாடக இசைக்கலைஞர்களின் குருவாக போற்றப்படும் சதாசிவ பிரம்மேந்திராள்ஆராதனை விழா மற்றும் இசைக்கச்சேரி நேற்று (மே., 13ல்) துவங்கியது.
மானாமதுரையில் சதாசிவ பிரம்மேந்திராள் ஆராதனை விழா வருடந்தோறும்நடைபெறுவது வழக்கம்.நேற்று காலை 7:00 மணிக்கு வேதபாராயணம், உஞ்சவ்ருத்தி, தீபாராதனை ஆகியவற்றுடன் நிகழ்ச்சி துவங்கியது. மாலை பாராட்டு விழா நடைபெற்றது.இன்று (மே., 14ல்) காலை 7:00 மணிக்கு பூஜை உஞ்சவிருத்தி,9:00 மணிக்கு ஆனந்தவல்லி அம்மன் கோயிலில் உள்ள சதாசிவ பிரம்மேந்திராள் சன்னதி முன் குரு அஞ்சலி,கோஷ்டி கானமும்,10:00 மணிக்கு விக்னேஷ்வர பூஜை, வடுக பூஜை, கன்யாபூஜை, வாசினி பூஜை,தம்பதி பூஜை, தீபஆராதனை யும் மற்றும் ஏராளமான கர்நாடக இசைக்கலைஞர்கள் பங்கேற்கும் கச்சேரிகளும் நடைபெற உள்ளது.ஏற்பாடுகளை சதாசிவ பிரம்மேந்திராள் ஆராதனை கமிட்டியினர் செய்து வருகின்றனர்.