பதிவு செய்த நாள்
15
மே
2019
03:05
கோத்தகிரி:கோத்தகிரி கட்டபெட்டு எல்லை மாரியம்மன் கோவில் திருவிழா கொண்டாடப் பட்டது.கடந்த, 7ம் தேதி காலை, 5:00 மணிக்கு, கணபதி ஹோமம் மற்றும் கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. தொடர்ந்து, நாள்தோறும் அம்மனுக்கு விசேஷ பூஜைகள் நடந்தன. 12ம் தேதி இரவு, 11:00 மணிக்கு, அம்மன் அழைப்பு நிகழ்ச்சி நடந்தது.13ம் தேதி காலை, 7:00 மணி முதல், பகல், 12:00 மணி வரை, அம்மனுக்கு அலங்கார பூஜையும், பகல், 12:00 மணி முதல், அன்னதானமும் நடந்தது.
மாலை, 3:00 மணிக்கு மேல் மாவிளக்கு பூஜை ஊர்வலம் நடந்தது. இதனை தொடர்ந்து, 7:00 மணிக்கு, அம்மனின் திருவீதி உலா நடந்தது. நேற்று (மே., 14ல்) பகல், 1:00 மணிக்கு பொங்கல் பூஜையும், மாலை, 3:00 மணிக்கு மேல் அம்மன் மஞ்சள் மஞ்சள் நீராட்டு விழாவும் நடந்தது. மாலை, 6:00 மணிக்கு மேல் அம்மனை கங்கையில் கரை சேர்த்தல் நிகழ்ச்சி நடந்தது. வரும், 20ம் தேதி மறு பூஜையுடன் விழா நிறைவடைகிறது. விழா ஏற்பாடுகளை, கோவில் கமிட்டியினர் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.