பதிவு செய்த நாள்
15
மே
2019
03:05
கூடலூர்: ஆனைக்கட்டி மாசி கரியபண்ட அய்யன் கோவில் திருவிழாவில், தமிழக - கர்நாடக பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.மசினகுடி ஆனைக்கட்டி வனப்பகுதியில், பழமை யான மாசி கரியபண்ட அய்யன் கோவில் அமைந்துள்ளது. இதன் திருவிழா கடந்த, 12ல் சிறப்பு பூஜைகளுடன் துவங்கியது.நேற்று முன்தினம் (மே., 13ல்), காலை, 9:00 மணிக்கு குண்டத்திற்கு மரம் கொண்டு வரும் நிகழ்ச்சி நடந்தது.
பிற்பகல், 2:00 மணிக்கு சிறியூர் மாரியம்மனும்; 2:30 மணிக்கு கொங்காளி அய்யன் அழைத்து வரும் நிகழ்ச்சிகள் நடந்தன.மாலை, 3:00 மணி முதல் 4:00 மணி வரை முடி எடுத்தல்; தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சிகள் நடந்தது. இரவு, 9:00 மணிக்கு அய்யன் புலிமேல் அமர்ந்து பவனி வரும் நிகழ்ச்சி நடந்தது.
அதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.நேற்று (மே., 14ல்), காலை, 7:30 மணிக்கு குண்டம் இறக்கும் நிகழ்ச்சி நடந்தது. பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் நிறைவேற்றினர்.தொடர்ந்து, கோவில் வளாகத்தில் புலி பவனி ஆட்ட ஊர்வலம் நடந்தது. சிறப்பு பூஜைகளுடன் விழா நிறைவு பெற்றது.விழாவில் நீலகிரி மட்டுமின்றி ஈரோடு, சத்தியமங்கலம், கர்நாடக மாநிலம் குண்டப்பேட் பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.