பாப்பாரப்பட்டி: பாப்பாரப்பட்டி பஸ் ஸ்டாண்ட் அருகே, அக்கு மாரியம்மன் கோவில் திருவிழா நடந்தது. இதில், அக்கு மாரியம்மனுக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரத்துடன் தீபராதனைகள் நடந்தன. பெண்கள் அம்மனுக்கு பொங்கல் வைத்தும், மாவிளக்கு எடுத்தும் வழிபட்டனர். இதேபோல் பக்தர்கள் முடி காணிக்கையளித்து, நேர்த்திக்கடன் செலுத்தினர்.
அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில், பாப்பாரப்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து வந்திருந்த பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.