அழகர்கோவில் சுந்தரராஜபெருமாள் கோயில் உண்டியல் காணிக்கை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24மே 2019 12:05
அலங்காநல்லூர் : அழகர்கோவில் சுந்தரராஜபெருமாள் கோயில் உண்டியல்கள் எண்ணப்பட்டன. 33 கிராம் தங்கம், 99 கிராம் வெள்ளி, 22 லட்சத்து 53 ஆயிரத்து 321 ரூபாய், வெளிநாட்டு டாலர் நோட்டுகளும் இருந்தன.தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள் கோயில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன. இதில் ரூ. 3 லட்சத்து 17ஆயிரத்து 399 ரூபாய், வெளி நாட்டு டாலர் நோட்டுகள் இருந்தன.உண்டியல் எண்ணும் பணியில் அய்யப்ப சேவா சங்கத்தினர், கோயில் பணியாளர்கள் ஈடுபட்டனர். நிர்வாக அதிகாரி மாரிமுத்து, தக்கார் பிரதிநிதி நல்லதம்பி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.