கிருஷ்ணராயபுரம் பகவதியம்மன் கோவிலில், புதிய தேருக்கு சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25மே 2019 01:05
கிருஷ்ணராயபுரம்: லாலாப்பேட்டை கொடிக்கால் தெரு, பகவதியம்மன் கோவிலில், புதிய தேருக்கு சிறப்பு பூஜை செய்து, வெள்ளோட்டம் விடப்பட்டது. கிருஷ்ணராயபுரம் அடுத்த, லாலாப்பேட்டை கொடிக்கால் தெருவில், பகவதியம்மன் கோவில் உள்ளது. திருவிழாவை முன்னிட்டு, கோவிலுக்கு புதிய தேர் செய்யப்பட்டது. கட்டுமானப்பணிகள் முடிந்து தயார் நிலையில் இருந்த தேருக்கு கலசம் வைத்து, நேற்று முன்தினம் (மே., 23ல்)காலை சிறப்பு பூஜை நடந்தது. பின் புதிய தேர், கோவிலைச் சுற்றி வெள்ளோட்டம் விடப்பட்டது.