கம்மாபுரம்: வைகாசி மாத சஷ்டியையொட்டி, கம்மாபுரம் பகுதி சுப்ரமணியர் கோவில்களில், சிறப்பு வழிபாடு நடந்தது.கம்மாபுரம் அடுத்த சி.கீரனூர் சுப்ரமணியர் கோவிலில், நேற்று முன்தினம் (மே., 25ல்) காலை 9:00 மணியளவில் அபிஷேக ஆராதனை நடந்தது. மாலை 4:00 மணியளவில் வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணியர் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார்.அதேபோல், விளக்கப்பாடி, புதுவிருத்தகிரி குப்பம், ஊ.மங்கலம் வேப்பங்குறிச்சி சுப்ரமணியர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. ஏராளமானோர் வழிபாடு செய்தனர்.