பண்ருட்டி வீரட்டானேஸ்வரர் கோவிலில்பஞ்சமி சிறப்பு யாகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27மே 2019 02:05
பண்ருட்டி: பண்ருட்டி திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில், தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு, வராகி அம்மனுக்கு சிறப்பு யாகம் நடந்தது.
பண்ருட்டி அடுத்த திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் தேய்பிறை பஞ்சமி தினத்தை முன்னிட்டு வராஹி அம்மனுக்கு பஞ்சமி சிறப்பு யாகம் நடந்தது. விழாவையொட்டி இரவு 7:00 மணிக்கு, நூறு கால் மண்டபத்தில் கலச ஸ்தாபனம் செய்யப்பட்டு, கணபதி பூஜை நடந்தது. பஞ்சமிக்கான சிறப்பு யாகம், வராகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இரவு 8:30 மணிக்கு வராகி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.