சமயநல்லுார் சக்தி மாரியம்மன் கோயில் பால்குட உற்ஸவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28மே 2019 01:05
சமயநல்லுார் : மதுரை சமயநல்லுார் சக்தி மாரியம்மன் கோயில் வைகாசி பால்குட உற்ஸவம் நடந்தது.மே 19 கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. நேற்று ஏராளமான பக்தர்கள் பால்குடம், அக்னிச்சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இன்று(மே 28) பெண்கள் முளைப்பாரி ஊர்வலம் சென்று வைகை ஆற்றில் கரைக்கவுள்ளனர். விழா ஏற்பாடுகளை இந்து நாடார் உறவின் முறை நிர்வாகிகள் செய்தனர்.