மங்கலம்பேட்டை மங்களநாயகி அம்மன் கோவில் தேர் திருப்பணி தீவிரம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28மே 2019 03:05
மங்கலம்பேட்டை: மங்கலம்பேட்டை மங்களநாயகி அம்மன் கோவில் தேர் திருப்பணி தீவிரமாக நடக்கிறது.
மங்கலம்பேட்டை மங்களநாயகி அம்மன் கோவில் தேர்த் திருவிழா கடந்த 14ம் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. தொடர்ந்து 16ம் தேதி முதல், 28ம் தேதி வரை தினசரி காலை 7:00 மணிக்கு அம்மனுக்கு அபிஷேக ஆராதனை, இரவு 9:00 மணிக்கு அலங்கரித்த வாகனத்தில் அம்மன் வீதியுலா நடக்கிறது.நாளை மறுநாள் (29ம் தேதி) நடக்கும் தேர் திரு விழாவிற்காக, தேர் திருப்பணி தீவிரமாக நடக்கிறது. வரும் 30 ம் தேதி மஞ்சள் நீர், 31ம் தேதி விடையாற்றி உற்சவம் நடக்கிறது.