இந்த மாட்டு வண்டி பயணம் ஏதோ ஒரு குக்கிராமத்தில் அல்ல. சென்னையின் மையப்பகுதியாக விளங்கும் மயிலாப்பூரில் தான்! இங்கு பாரம்பரியம் மிக்க மயிலை வேதாந்த தேசிகர் தேவஸ்தானம் கோயிலில் பெருமாள் திருமஞ்சனம், மடைப்பள்ளியில் தயாராகும்பிரசாத வகைகள் உள்ளிட்ட எல்லாவற்றுக்கும் கிணற்றிலிருந்து எடுக்கப்படும் தண்ணீரையே உபயோகிப்பது வழக்கம். குழாய் நீர்,கேன் வாட்டர் போன்றவற்றை உபயோகிப்பதில்லை. ஆனால், தற்சமயம் கோயில் கிணறு வறண்டு விட்டதால், சம்பிரதாயத்தைக்கடைபிடிக்க, தினமும் சற்று தொலைவிலுள்ள வீடுகளின் கிணற்றிலிருந்து தண்ணீரை மாட்டு வண்டியில் கொண்டு வருகிறார்கள் கோயில் அர்ச்சகர்கள்.