பெரியநாயக்கன்பாளையத்தில் சகாய மாதா ஆலயம் புதுப்பிப்பு: விழா கொண்டாடிய கிறிஸ்தவர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28மே 2019 03:05
பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன்பாளையம் அருகே ஜோதிபுரத்தில் உள்ள இடைவிடா சகாய மாதா தேவாலயம் விரிவாக்கம் செய்யப்பட்டு புதுப்பித்தல் விழா நடந்தது.புதுப்பித்தல் விழாவிற்கு, கோவை மறை மாவட்ட முதன்மை குரு ஜான்ஜோசப் ஸ்தனீஸ் முன்னிலை வகித்தார்.
கோவை மறை மாவட்ட ஆயர் தாமஸ் அக்குவினாஸ் தேவாலயத்தை புனிதப்படுத்தினார். இதையடுத்து சிறப்பு திருப்பலி நிகழ்ச்சிகளும், சிறப்பு ஆராதனைகளும் நடைபெற்றன. இதில் திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். விழாவில், மறை மாவட்ட முதன்மை குரு ஜேக்கப், கோவை வடக்கு எம்.எல்.ஏ., அருண்குமார் மற்றும் பாதிரியார் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை பங்கு தந்தை மேத்யூ ஜூட் பால், சகோதரியர் மற்றும் பங்கு பேரவையினர் செய்து இருந்தனர்.