கிருஷ்ணராயபுரம் காளியம்மன் கோவிலில் புதிய சிலைகள் பிரதிஷ்டை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30மே 2019 01:05
கிருஷ்ணராயபுரம்: லாலாப்பேட்டை சந்தைப்பேட்டை காளியம்மன் கோவிலில், வெள்ளைய ம்மன், பொம்மியம்மன் சிலைகள் பிரதிஷ்டை செய்து, கும்பாபிஷேகம் விழா நடந்தது. கிருஷ்ணராயபுரம் அடுத்த லாலாப்பேட்டை சந்தைப் பேட்டையில், காளியம்மன் கோவில் உள்ளது. இதில், மதுரைவீரன் சுவாமி சன்னிதியில், வெள்ளையம்மன், பொம்மியம்மன் சுவாமியின் புதிய சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, கும்பாபிஷேகம் விழா நடந்தது. கோவில் வளாகத்தில் சிறப்பு யாகம் நடத்தி, சுவாமி சிலைகளை வைத்து பூஜை செய்து, சன்னதியில் வைக்கப்பட்டது.