காரைக்கால்: திருநள்ளாறு சனீஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ விழாவையொட்டி தேர்கள் சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.திருநள்ளார் சனீஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவ விழா கடந்த 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. வரும் 5ம் தேதி அடியார்கள் நால்வர் புஷ்ப பல்லக்கு வீதியுலா நடக்கிறது. 6ம் தேதி செண்பக தியாகராஜ சுவாமி வசந்த மண்டபத்தில் எழுந்தருளல்.10ம் தேதி பஞ்சமூர்த்திகள் ரிஷப வாகனத்தில் திருவீதி உலா நடக்கிறது.வரும் 12ம் தேதி தேர் திருவிழாவையொட்டி, ஐந்து தேர்களை தயார் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
இதற்காக தேரைச் சுற்றி அமைக்கப்பட்டிருந்த செட் அகற்றப்பட்டு தேரில் ஹைட்ராலிக் பிரேக் பொருத்தும் பணி மேலும் தேர் மேற்கூரை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.