பதிவு செய்த நாள்
03
ஜூன்
2019
02:06
உடுமலை:அணிக்கடவு உச்சிமாகாளியம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா, வரும் 6ம் தேதி நடக்கிறது.குடிமங்கலம் ஒன்றியம் அணிக்கடவு கிராமத்தில் பிரசித்தி பெற்ற உச்சி மாகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் கும்பாபிஷேக விழா, நாளை (ஜூன்., 4ல்) காலை, 9:00 மணிக்கு விநாயகர் பூஜை, லட்சுமி ஹோமத்துடன் துவங்குகிறது.
மாலையில், 6:00 மணிக்கு வாஸ்து சாந்தி, மண் எடுத்தல், முளைப்பாரியிடுதல், முதற்கால யாக வேள்வி மற்றும் தீபாராதனை நடக்கிறது. வரும் 5ம் தேதி காலை, 7:00 மணிக்கு
இரண்டாம் கால யாக வேள்வி, கோபுர கலசம் வைத்தல் நடக்கிறது.மாலையில், லலிதா சகஸ்ரநாமம், மருந்து சாற்றுதல் போன்ற வழிபாடுகளும், இரவில், வள்ளி கும்மியாட்டம்,
கலைநிகழ்ச்சி இடம்பெறுகின்றன.
தொடர்ந்து, 6ம் தேதி, காலை, 7:00 மணிக்கு நான்காம் கால யாக பூஜை, காலை, 10:30 மணிக்கு கலசங்கள் யாகசாலை சுற்றுதல் நடக்கிறது. காலை, 10:50 மணிக்கு கோபுர கும்பாபி
ஷேகமும், தொடர்ந்து, செல்வவிநாயகர் உச்சிமாகாளி யம்மனுக்கு கும்பாபிஷேகமும் நடக்கிறது. இறுதியில் கோ பூஜை நடக்கிறது.